புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் அரச அதிகாரிகள் பலருக்கு சிக்கல்!

புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் அரச அதிகாரிகள் பலருக்கு சிக்கல்!

புதிய அரசாங்கம் பதவியேற்றதும் கடந்த 52 நாட்களில் வழங்கப்பட்ட சட்டவிரோத அரச பதவிகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சட்டவிரோதமாக பணிக்கு அமர்த்தப்பட்ட அதிகாரிகள் நீக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பதவி விலக்கப்பட்டதன் பின்னர் அவரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் விலக்கப்பட்டு அங்கு பல புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை கடந்த 52 நாட்களில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பல அதிகாரிகள் நேற்றே தமது பதவிகளை விட்டு விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net