மரண தண்டனை கைதிகளின் பெயர்ப்பட்டியல்! சிறைச்சாலைகள் ஆணையாளர் பதில்!

மரண தண்டனை கைதிகளின் பெயர்ப்பட்டியல்! சிறைச்சாலைகள் ஆணையாளர் பதில்!

போதைப்பொருள் கடத்தல் கைதிகளை மரண தண்டனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் பதில் வழங்கியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை வழங்குவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் பெயர் பட்டியலை கோரிய போதும் அவர்கள் அதில் மேன்முறையீட்டை செய்தவர்களின் பெயர்களையும் உள்ளடங்கியுள்ளனர்.

எனவே தான் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தாமதம் ஏற்படுகிறது என்று ஜனாதிபதி அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் மரண தண்டனை கைதிகளாக உள்ள போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறைகளில் உள்ள 18 முக்கியமான நபர்களில் சிலர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை செய்துள்ளமையை தாம் ஜனாதிபதிக்கான பட்டியலில் சுட்டிக்காட்ட வேண்டியதுஅவசியமாகும் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 5190 Mukadu · All rights reserved · designed by Speed IT net