புதிய பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு !

புதிய பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு !

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்தப் பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளைய தினம் 30 பேர் கொண்ட அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று, தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று ரணில் விக்ரமசிங்க 5 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net