கிளிநொச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம்

கிளிநொச்சி யாழ் மாவட்ட மக்கள் இணைந்து இன்று கிளிநொச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

நாட்டில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கண்டித்து குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மனித உரிமை செயற்பாட்டு இயக்கங்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் ஏ9 வீதியால் டிப்போ சந்திவரை சென்று அங்கு கவன ஈர்ப்பும் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் பாதகமான விடயங்கள் தொடர்பில் மக்களை தெளிவு படுத்தம் வகையில் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கோசமிட்டனர்.

தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் புதிய சட்டம் ஒன்றை இயற்றி நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேசத்தை கண்துடைப்பதற்காக குறித்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

எனவே எமக்கு இந்த சட்டம் வேண்டாம் என தெரிவித்தனர். இவ்வாறான சட்டம் நடைமுறையில் இருந்த நிலையில் எமது உறவுகள் தொடர்ந்தும் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளனர். எனவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திலும் தொடர்ந்தும் அவர்கள் சிறையில் வாட வழிவகுக்கும் எனவும் தெரிவித்தனர். எனவே இந்த சட்டத்தை முழுமையாக அகற்ற வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

Copyright © 5810 Mukadu · All rights reserved · designed by Speed IT net