நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று பெண்களுக்கு அவதூறு!

நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதாக தெரிவிப்பு.

நிலுவைக்கடன்களைப் பெற்றுக்கொள்வதாக வீடுகளுக்குச் செல்லும் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் நேற்றுமுன் தினம் மாலை 4மணியளவில் திருநாவற்குளம் பகுதியிலுள்ள பெண் தலைமைக்குடும்பம் ஒருவரின் கடைக்கு சென்ற ஊழியர்கள் அப்பெண்ணிடம் நுண்நிதி நிறுவனத்திற்குரிய மிகுதி கட்டுப்பணம் பெற்றுக்கொள்வதற்குச் சென்றபோது தற்போது பணம் இல்லை பின்பு நிறுவனத்திற்கு வந்து தருவதாக தெரிவித்த பெண்தலைமைக்குடும்பத்திடம் எங்காவது சென்று வந்து பணத்தைக்கட்டுமாறு அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தன்மீது அவமானத்தை ஏற்படுத்தும் வார்த்தை பிரயோகித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்விடம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றுமுன் தினம் மாலை திருநாவற்குளம் பகுதியிலுள்ள பெண் தலைமைக்குடும்பம் ஒன்றின் கடைக்குச் சென்ற நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் தனது குடும்ப வருமானத்திற்காக சிறிய உணவகம் ஒன்றினை நடாத்திவரும் குடும்பப் பெண்ணிடம் நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக்கொண்ட கடன் பணத்தின் மிகுதி கட்டுப்பணத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர்.

எனினும் தன்னிடம் தற்போது பணம் இல்லை பின்னர் நிறுவனத்திற்கு வந்து செலுத்தவதாக தெரிவித்துள்ளனார்.

இதையடுத்து நிறுவனப்பணியாளர் எங்காவது சென்று வந்து பணத்தினைக்கட்டுமாறு அவதூறான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தி தெரிவித்துள்ளமை தனக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பெண்மணி அழுத நிலையில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சாந்தசோலைப்பகுதிகளுக்கு வீடுகளுக்கு சென்று நிலுவைப்பணத்தினை அறவிட்டு வரும் நிறுவனப்பணியாளர்கள் காலதாமதமான கட்டுப்பணங்களுக்கு அதிக வட்டிப்பணத்தினை அறவிட்டு வருவதாக குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

புதுப்பித்த கடனடிப்படையில் றீ-லோன் முறையில் பணத்திற்கு அதிக வட்டி அறவிடப்பட்டு வருகின்றமை தற்போது தெரியவந்துள்ளது. இதனால் பெண்கள் மேலும் கடன் சுமைக்குள் சிக்கியுள்ளனர்.

இந்நடவடிக்கை பெண்களை மேலும் பொருளாதாரத்தில் சோர்வடையச் செய்துள்ளதுடன் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக பெண்கள் போராடவேண்டிய நிலையையும் திரும்பவும் ஏற்படுத்தியுள்ளதாக சாந்தசோலையிலுள்ள நுண்நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுக்கொண்ட குடும்பப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள பெண்கள் அமைப்பினர் தமது பகுதிக்கு கடன் பணம் அறவிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை பெண்களை தற்கொலை செய்யும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் இதனால் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக பெண்கள் போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சாந்தசேலை பெண்கள் அமைப்பின் போசகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 9989 Mukadu · All rights reserved · designed by Speed IT net