கிளிநொச்சி அக்கராயன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சவாரி .

கிளிநொச்சி அக்கராயன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சவாரி .

கிளிநொச்சி அக்கராயன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சவாரி இன்று கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த போட்டி நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் அக்கராயன் சவாரி திடலில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து 78 ஜோடிகள் இன்றைய போட்டியில் பங்கு பற்றின.

அ,ஆ,இ,ஈ பிரிவுகள் என போட்டிகள் இடம்பெற்றது, இதன்போது போட்டிக்காக கொண்டுவரப்பட்ட மாடுகள் போட்டியில் ஈடுபடுத்தப்பட்டபோது மக்கள் உற்சாகத்துடன் பார்வையிட்டமை குறிப்பிடதக்கதாகும்.

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள், கலை, கலாச்சார விழுமியங்கள் அழிவடைந்து வரும் நிலையில், 50 வருடங்களிற்கு மேல் பாரம்பரியமாக கொண்ட மாட்டுவண்டி சவாரி போட்டியினை அழியவிடாது பாதுகாக்க மக்கள் முயல்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையிலும், சவாரி திடல்கள் வழங்கப்படவில்லை என இதன்போது போட்டி ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த போட்டியில்.

“அ” பிரிவில் –
முதலாமிடம் – அளவெட்டி
இரண்டாம் இடம் – மட்டுவில்
மூன்றாம் இடம் – வட்டக்கச்சி

“ஆ” பிரிவில் –
முதலாமிடம் – வட்டக்கச்சி
இரண்டாம் இடம் – அளவெட்டி
மூன்றாம் இடம் – அச்செழு

“இ” பிரிவில் –
முதலாமிடம் – அளவெட்டி
இரண்டாம் இடம் – வட்டக்கச்சி
மூன்றாம் இடம் – வட்டுக்கோட்டை

“ஈ” பிரிவில் –
முதலாமிடம் – மட்டுவில்
இரண்டாம் இடம் – அளவெட்டி
மூன்றாம் இடம் – வட்டுக்கோட்டை

“உ” பிரிவில் –
முதலாமிடம் – ரெட்பானா
இரண்டாம் இடம் – முரசுமோட்டை
மூன்றாம் இடம் – அளவெட்டி ஆகிய இடங்களை பெற்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net