விகாரி வருஷம் 14ஆம் திகதி நண்பகல் பிறக்கிறது.

விகாரி வருஷம் 14ஆம் திகதி நண்பகல் பிறக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கம்

அறுபது வருஷத்துத் தமிழ் ஆண்டு பெயர்ப் பட்டியலில், புதிதாகப் பிறக்கப் போகும் விகாரி வருஷம் முப்பத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

இது 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, (சித்திரை மாதம் முதலாம் நாள்) பிற்பகல்; 1மணி 12 நிமிஷத்தில் விகாரி வருஷம் பிறக்கிறது.

காலை 9 மணி 12 நிமிஷம் முதல், மாலை 5மணி 12 நிமிஷம் வரை விஷு புண்ணிய காலமாகும்.

இக் காலத்தில், மருத்து நீர் தெளித்து, சிரசில் ஆலிலையும், காலில் இலவமிலையும் வைத்து நீராடி, வெள்ளை நிற, சிவப்புக் கரை அமைந்த பட்டாடை அணிந்து, வழிபடும் கடவுளைத் தியானித்து, நற்கருமங்களைச் செய்ய உறுதி எடுத்துக் கொள்ளவும்.

கண்ணாடி, தீபம், நிறைகுடம், பெற்றோர்,பெரியோர், மஞ்சள், குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, மலர்கள் போன்ற மங்களப் பொருட்களைத் தரிசித்து, இறை வழிபாடும் செய்யக் கடவர்.

கை விஷேஷம்:

  • சித்திரை மாதம் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை (14.04.2019) இரவு 10.31 முதல் 11.15 வரையாகும்.
  • சித்திரை 4ஆம் நாள் புதன் கிழமை (17.04.2019) பகல் 10.16 முதல் 11.51 வரையாகும்.

உங்கள் வாழ்வில் சுபீட்சம் சூழ்க.

விகாரி வருஷப் பிறப்புக் கருமங்கள்.

திருக்கணித பஞ்சாங்கம்.

விகாரி வருஷம் 14.04.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பகல் 02.09 மணிக்குப் பிறக்கிறது.

பகல் மணி 10.09 முதல், மணி 06.09 வரை சங்கிரமண புண்ணிய காலமாகும். இப் புண்ணிய காலத்தில் யாவரும், தலையில் இலவம் இலையும், காலில் விளா இலையும் வைத்து, மருத்து நீர் தேய்த்து ஸ்நானஞ் செய்ய வேண்டும்.

சிவப்பு நிறப் பட்டாயினும் சிவப்புக் கரை வைத்த, புதிய வெள்ளை நிற வஸ்திரமாயினும் அணிய வேண்டும்.

இருக்கும் தங்க ஆபரணங்களை அணிந்து, பூரண கும்பத்தைத் தரிசித்து, மேலும் மங்களகரமான பொருட்களைத் தரிசித்து, இஷ்ட, குல தெய்வங்களை வணங்குதல் நலமாகும்.

கை விஷேஷம்:

  • சித்திரை முதலாம் நாள் ஞாயிற்றுக் கிழமை(14.04.2019) காலை 11.00முதல், மதியம் 12.00 வரை.
  • சித்திரை முதலாம் நாள் ஞாயிற்றுக் கிழமை(14.04.2019) இரவு 08.20 முதல் 09.30வரை.

உங்கள் வாழ்வில் சுபீட்சம் சூழ்க.

Copyright © 6909 Mukadu · All rights reserved · designed by Speed IT net