“குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து 12 வெளிநாட்டவர்களை காணவில்லை”

“குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து 12 வெளிநாட்டவர்களை காணவில்லை”

உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து 12 வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாரு காணாமல் போயுள்ளவர்கள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்படாத சடலங்கள் இடையே சடலமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டது.

இதுவரை குண்டுவெடிப்பில் உயிரிழந்த 42 வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

பங்களாதேஷ் பிரஜை ஒருவர், இரு சீனர்கள், 11 இந்தியர்கள், 3 டென்மார்க் பிரஜைகள், ஜப்பான் பிரஜை ஒருவர், நெதர்லாந்து பிரஜை ஒருவர், போர்த்துக்கள் பிரஜை ஒருவர், சவூதி அரேபியர்கள் இருவர், ஸ்பைன் பிரஜைகள் இருவர், சுவிசர்லாந்து பிரஜை ஒருவர், துருக்கி பிரஜைகள் இருவர், பிரிட்டன் பிரஜைகள் ஆறு பேர், அமெரிக்க பிரஜை ஒருவர், அமெரிக்க பிரித்தனைய இரட்டை பிரஜா உரிமைக் கொண்ட இருவர், சுவிசர்லாந்து மற்றும் நெதர்லாந்து இரட்டை பிரஜா உரிமைக் கொண்ட ஒருவர், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இரட்டை பிரஜை உரிமைக் கொண்ட இருவர் என 42 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை தொடர் குன்டுத்தாக்குதலால் காயமடைந்த மேலும் 5 வெளிநாட்டவர்கள் கொழும்பு தெற்கு போதன வைத்தியசாலையிலும் தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்றுவருவதாக வெளிவிவகார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net