காலாவதியான கிறீம்களை நாடு முழுவதும் விநியோகித்தவர்கள் கைது!

காலாவதியான கிறீம்களை நாடு முழுவதும் விநியோகித்தவர்கள் கைது!

நீர்க்கொழும்பு பகுதியில் காலாவதியான முகப்பூச்சுக்களை (கிறீம்) கொள்வனவு செய்து அவற்றை மிக சூட்சுமமான முறையில் நாடு முழுவதும் விநியோகித்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்குருகாரமுள்ள பகுதியில் நேற்று திங்கட்கிழமை நீர்க்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்த பொலிஸார் அங்கிருந்து காலாவதியான முகப்பூச்சுக்கள் (கிறீம்), அழகு சாதன பொருட்கள் , அவற்றை பொதி செய்ய பயன்படுத்திய பெட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு நாடுபூராகம் குறித்த காலாவதியான அழகு சாதன பொருட்களை விநியோகம் செய்தமை தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீர்க் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Copyright © 2043 Mukadu · All rights reserved · designed by Speed IT net