ஜனாதிபதி ஆட்சி – பிரதமர் ஆட்சி இதுவே பெரும் பிரச்சினை!

ஜனாதிபதி ஆட்சி – பிரதமர் ஆட்சி இதுவே பெரும் பிரச்சினை!

இந்த நாட்டில் ஜனாதிபதி ஒன்றை நடத்துகிறார், பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை நடத்துகிறது. இதுவே தற்போது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் பதவி தொடர்பாக ஏற்பட்ட சர்சையினால் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் நேற்று முந்தினம் திங்கட்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்து குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தமை தொடர்பாகவும் அப்பதவியானது எவ்வாறு அமையப்பட வேண்டும் என்பது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுற்று நிருபம் தெரிவிக்கும் விடயம் தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை அவரது இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பாடு செய்தியிருந்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

இணைத்தலைவர் பதவிக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்டின் நியமனத்தினை இரத்து செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இப்பதவிகள் தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளபோதும் அதற்கு எதிராக, மாறாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.இந் நியமனத்தினை இரத்து செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சார்பில் ஜனாதிபதியினை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கும் போது ….

இந்த நாட்டில் தற்போது சிறந்த அரசியல் அமைப்பு இல்லை. காராணம் அமைச்சரவையின் தலைவராக இருப்பவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகும்.

அவர் இணைத்தலைமை என்று தமது கட்சியின் அமைப்பாளர்களையும் தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் மாவட்ட அபிருத்திக் குழுவிற்கும் பிரதேச அவிருத்தி குழுவிற்கும் நியமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுற்று நிருபமானது இந்த இணைத் தலைமைகளுக்கோ அமைப்பாளர்களுக்கோ குறித்த பதவி விடயம் தொடர்பாக இடமளிக்கவில்லை.

அவ்வாறானால் இந்த நாட்டில் ஜனாதிபதி ஒன்றை நடத்துகிறார், பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை நடத்துகிறது. இதுவே தற்போது பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியழேந்திரன், குறித்த சுற்று நிருபத்திற்கு எதிரான நியமனம் தொடர்பான விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

அது அவரால் மேற்கொள்ளமுடியும். முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமட்டினை இணைத் தலைவராக நியமித்திருப்பது குறித்த சுற்று நிருபத்திக்கு முரணானது என்றும் ஆகவே இந்த நியமனத்திளை உடனடியாக இரத்து செய்யுமாறு எடுத்துக் கூறி இரத்து செய்வதற்கு அவர் முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net