ஐ.எஸின் தலைவரின் தலையை குறி வைத்துள்ள பிரிட்டனின் சிறப்பு படை!

ஐ.எஸின் தலைவரின் தலையை குறி வைத்துள்ள பிரிட்டனின் சிறப்பு படை!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபு பக் அல் பக்தாதியை வேட்டையாடுவதற்காக பிரிட்டனின் எஸ்.ஏ.எஸ். சிறப்பு படையணி அதிரடியாக களமிறங்கியுள்ளது.

அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் பிடிப்பது அல்லது கொலை செய்வது’ என்பதே குறித்த படை நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என கூறப்படுகின்றது.

ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், தற்கொலை குண்டுதாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

இதையடுத்து ஐ.எஸ்.தலைவர், தாக்குதலுக்கு உரிமை கோரும் காணொளியை வெளியிட்டிருந்தார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் தன்னை வெளியில் காட்டிக்கொண்டுள்ள ஐ.எஸ். தலைவரின் தலையை குறி வைத்துள்ளது பிரிட்டனின் எஸ்.ஏ.எஸ். படைப்பிரிவு.

அதிரடி நடவடிக்கைகளுக்காக 1941ஆம் ஆண்டிலேயே குறித்த படையணி பிரிட்டனில் உருவாக்கப்பட்டது.

அதேவேளை, ஐ.எஸ். அமைப்பின் தலைவர், ஈராக்கின் அன்பார் பாலைவனப் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்தே பிரிட்டனின் சிறப்பு படையணி ஈராக்குக்கு விரைந்துள்ளதாகவும், ஈராக் படைகளின் தலைமையின் கீழ் இந்த சமர் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2740 Mukadu · All rights reserved · designed by Speed IT net