ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை மீள ஆரம்பம்.

ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை மீள ஆரம்பம்.

ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்புக் கருதி ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும் எனவும், ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

Copyright © 9407 Mukadu · All rights reserved · designed by Speed IT net