ரணில் யாழ்ப்பாணத்தில் புதிய வீடுகள் கையளிப்பு.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வீடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையளித்துள்ளார்.

பிரதமர் தலைமையிலான வடக்கு அபிவிருத்தி அமைச்சின் நிதி உதவியில் யாழ் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மேற்படி பகுதியில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைக்கப்பட்டன.

இந்த வீடுகளுக்கு கையளிக்பதற்காக நேற்று யாழ்ப்பாணம் விஐயம் செய்த பிரதமர் இன்று (02-06-2019) இந்த வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்லைத் திரையாக்கம் செய்து வைத்ததுடன் வீடுகளையும் நாடா வெட்டி திறந்து வைத்து வீட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, தயாகமகே, விஐயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா , தர்மலிங்கம் சித்தார்த்தர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Copyright © 4144 Mukadu · All rights reserved · designed by Speed IT net