நெத்தலியாறு நீர் விநியோகம் கண்டாவளை விவசாயிகளால் மறிப்பு!

நெத்தலியாறு நீர் விநியோகம் கண்டாவளை விவசாயிகளால் மறிப்பு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு மேற்கு மற்றும் நெத்தலி ஆற்றுப்பகுதி விவசாயிகள் வயல்நிலங்களுக்கான நீர்வழங்கள் ஆற்றினை கண்டாவளை விசாயிகள் கனரக இயந்திரம் கொண்டு அடைத்து விட்டதால் நெற்பயிர்கள் எரிந்து சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நெத்தலியாற்று விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் நெத்தலியாற்று மற்றும் விசுவமடு மேற்கு விவசாயிகள் ஊடகங்களை அழைத்து அவர்கள் பிரச்சனையினை நேரடியாக காட்டி தீர்வு பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

இதுதொடர்பில் தெரியவருகையில்,

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் கல்மடு குளத்தின் கழிவு நீரினை நம்பி நீண்டகாலமாக விவசாயம் செய்துவரும் முல்லைத்தீவு மாவட்ட நெத்தவியாறு விவசாயிகள் இந்த ஆண்டு நெற்பயிர் செய்கை பண்ணப்பட்ட நிலையில் கண்டாவளை விவசாய அமைப்பினர் நெத்தலி ஆற்றுப்பகுதியில் 120 ஏக்கர் நெற்செய்கைக்கு நீர்வழங்கும ஆற்றினை மூடிவிட்டதால் விவசாயம்,கால்நடைகள்,என்பன பாதிக்க ப்பட்டுள்ளதாக நெத்தலிஆறு மற்றும் விசுவமடு மேற்கு விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

நெத்தலியாறு,விசுமடு மேற்கு பகுதியினை சேர்ந்த விசாயிகள் 1972 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த பகுதியில் விவசாயம் செய்து வருவதாக தெரிவித்த விவசாயிகள் கல்மடு குளத்தில் இருந்தா ஊற்று நீர்தான் இந்த நெத்தலி ஆற்றில் பாய்கின்றது என்றும் நெத்தலிஆற்றில் இருந்து கிழை ஆறாக பிரிந்து எங்கள் வயல் நிலங்கள் ஊர்மனைகள் ஊடாக சென்று மீண்டும் நெத்தலிஆற்றில் சேர்கின்றது.

இயற்கை ஆறுகளை மூடக்கூடாது என்று 1980 ஆம் ஆண்டு தொடக்கம் அரச அதிகாரிகள் அறிவித்துள்ளார்.

இன்னிலையில் இந்த ஆண்டு இந்த வாய்க்காலினை மூடியுள்ளார்கள் இதனால் பயிர்கள் எரிகின்றன இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர்பிரச்சனை இதனை திறந்து விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

குறித்த விவசாயிகள் நெற்செய்கை பண்ணும்போது இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்கள் ஆனால் நெல்விதைத்து ஒரு மாதம்கடந்து விட்ட நிலையில் கண்டாவளை விவசாயிகள் 31.05.19 அன்று குறித்த ஆற்றினை கனரக இயந்திரம் கொண்டு மூடியுள்ளார்கள்.

கல்மடு குளத்தில் இருந்து வான்பாயும்போதும் மழைவெள்ளம் பெருக்கெடுக்கும் போது நெத்தலியாறு, விசுவமடு மேற்கு விவசாய நிலங்களும் விவசாயிகளுமே பாதிக்கப்படுகின்றார்கள் ஆனால் கண்டாவளை விவசாயிகள் எமது விவசாய நிலத்திற்கு அருகில் இருந்து நீரினை மறித்து 15 கிலோமீற்றர் தூரத்திற்கு அந்த கழிவு நீரினை கொண்டு செல்கின்றார்கள்.

ஆனால் குளத்தில் வரும் கழிவு நீரினை பயன்படுத்தி காலம் காலமாக செய்கை பண்ணிவந்த எங்களுக்கு இந்த ஆண்டு கட்டாவளை விவாசயிகள் ஆற்றின் ஒருபகுதியினை மறித்து தண்ணியினை தடுத்திருப்பது வேதனை அளிக்கின்றது என்று விவசாயிகள் கவலை தெரிவித்த அதேவேளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net