கூட்டமைப்பின் ஆதரவுடனேயே இந்த அரசை காப்பாற்ற முடிந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே இந்த அரசை காப்பாற்ற முடிந்தது.

நீங்கள் வழங்கிய வாக்குகளால் தான் இன்று இருக்கின்ற ஜனாதிபதியும் அரசும் காணப்படுகின்றது. எனக்கு ஆரம்பத்தில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சே கிடைத்தது.

அது ஓர் பெயர் பலகை மாத்திரம் கொண்ட அமைச்சாகவே இருந்தது.

அதன் பின் சிறு கைத்தொழில் வாசனை பொருட்களை ஏற்றுமதி செய்யும் அமைச்சாக மாற்றியுள்ளேன்.
சாதாரணமாக பெயர்பலகையாக இருந்த அமைச்சினை இன்று மாற்றமுள்ள அமைச்சாக மாற்றியுள்ளேன்.

இந்த அமைச்சு தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடியபோது,

பிரதமர் அவர்கள் இளைஞர் விவகார அமைச்சை இவ்வளவு தூரம் நான் மாற்றியமைத்தது போன்று, நீங்களும் வெறும் பெயர்பலகை கொண்ட இந்த அமைச்சை மாற்றியமைக்குமாறும் தெரிவித்தார்.

வறுமையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளோம். அந்த வகையில் பல்கலைக்கழக மாணவர்களிற்கான புலமை பரிசில்கள், சுயதொழில் ஊக்குவிப்பு, வாழ்வாதார உதவிகள், முயற்சியாளர்களிற்கான கடன்கள் என பல்வேறு திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம்.

இவ்வாறான திட்டங்கள் ஊடாக இந்த நாடும், நாட்டு மக்களும் நன்மை அடைவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

52 நாட்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அரசியல் சூழ்ச்சிகள் இடம்பெற்றன. அவற்றை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் முறியடித்துள்ளோம்.

இந்த 52 நாட்களிற்குள் மகிந்த ராஜபக்ச அவர்கள் கள்ள கபடத்தனமாக பிரதமராக சிம்மாசனத்தில் ஏறினார்.

அவரால் ஜனநாயக ரீதியில் பாராளுமன்றத்தில் நிரூபிக்க முடியாமல் போனது. இதற்கு பிரதான காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழர் கூட்டணியும் ஆதரவாக இருந்தன.

அதிலிருந்து நாட்டை மீட்டு கடந்த 6 மாதங்களாக இந்த நாட்டை அபிவிருத்தி செய்து வருகின்ற போது, ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்புக்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டை பாதுகாத்துள்ளனர்.

ஆரம்ப காலத்தில் சிங்களவர்களிற்கும் தமிழர்களிற்குமிடையில் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தற்போது முஸ்லிம்களிற்கும், சிங்கள மக்களிற்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்த சிறு குழுவினர் முயற்சி செய்தனர்.

அதனை நாம் முறியடித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 6 லட்சம் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த தொகையை அதிகரிப்பதற்கு தனது அமைச்சினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net