அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி!

அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி!

அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 11ஆம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

26 பேருக்கு இவ்வாறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும், பயிற்சிகளின் நிறைவில் அலுக்கோசு பதவிக்காக இருவர் நிரந்தர நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நிச்சயம் மரண தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © 0158 Mukadu · All rights reserved · designed by Speed IT net