இலங்கைவாழ் முஸ்லிம் மக்களால் புனித நோன்பு பெருநாள் அனுஷ்டிப்பு!

இலங்கைவாழ் முஸ்லிம் மக்களால் புனித நோன்பு பெருநாள் அனுஷ்டிப்பு!

இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் இன்று (புதன்கிழமை) புனித நோன்பு பெருநாளை அனுஷ்டிக்கின்றனர்.

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைப்பிறை தென்பட்டதையடுத்து இந்த அறிவிப்பை கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு வெளியிட்டுள்ளது.

சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படும் இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதம் புனித ரமழான் மாதமாகும்.

அகிலத்திற்கும் ஓர் அருட்கொடையான புனித அல்குர்ஆன் ரமழான் மாதத்திலேயே பூமிக்கு அருளப்பெற்றது.

இந்த மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து ஒரு மாதகாலமாக நோன்பு கடைபிடித்திருந்த முஸ்லிம் மக்கள், இன்று நோன்பு பெருநாளை அனுஷ்டிக்கின்றனர்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை விசேட பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன.

நாட்டில் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை நிலவி வருகிறது.

இதன் காரணமாக பல வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறியிருந்தன.

அதனைத்தொடர்ந்து அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே முஸ்லிம் மக்கள் இன்று நோன்பு பெருநாளை அனுஷ்டிக்கின்றனர்.

இதன் காரணமாக பள்ளிவாசல்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net