இலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும்!

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், இலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் என சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது.

பொறுமையானவர்கள், அமைதியான நாட்டவர்கள் என்று இலங்கையர்கள் பெற்றுக்கொண்டுள்ள நற்பெயரை தொடர்ந்தும் பாதுகாத்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பல வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தன.

இந்நிலையிலேயே சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில், அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் தவறினால், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனவும் சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது.

சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு என்பது உலகில் பலமிக்க முஸ்லிம் நாடுகளைக் கொண்ட, முழு உலகத்துக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடிய சர்வதேச அமைப்பு என்பதுடன், இந்த அமைப்பில் 57 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net