இனவெறியைத் தூண்டும் காணொளிகளைத் தடை செய்ய தீர்மானம்!

இனவெறியைத் தூண்டும் காணொளிகளைத் தடை செய்ய YouTube நிறுவனம் தீர்மானித்துள்ளது.

YouTube நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘YouTube நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையைக் கொண்டது.

தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும், ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் காணொளிகளை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net