40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பெட்டகம் திறப்பு.

40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பெட்டகத்தை திறக்கும் முயற்சி வெற்றி!

கனடாவில் 40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பெட்டகத்தை திறக்கும் முயற்சி வெற்றியளித்துள்ளது.

கனடாவின் அல்பெர்ட்டா பகுதியிலுள்ள அரும்பொருள் காட்சியகத்தில் பழைய பாதுகாப்புப் பெட்டகம் ஒன்று உள்ளது.

அதனுள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்க கடந்த 40 ஆண்டுகளில் எத்தனையோ முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும் எதுவும் பலன் தரவில்லை.

எனினும், கடந்த மாதம் அங்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தவர் தன்னுடைய முதல் முயற்சியிலேயே குறித்த பெட்டகத்தை வெற்றிகரமாகத் திறந்துவிட்டார்.

1900 களின் முற்பாதியில் திறக்கப்பட்ட புரன்ஸ்விக் நட்சத்திர விடுதிக்கு சொந்தமானது அந்தப் பெட்டகம். 1970களில் குறித்த நட்சத்திர விடுதி மூடப்பட்டபோது பெட்டகமும் மூடப்பட்டது.

கொல்லர்கள், பெட்டகத்தை உற்பத்தி செய்த நிறுவனத்தினர், நட்சத்திர விடுதியின் முன்னாள் ஊழியர்கள் அனைவரிடமும் அதனைத் திறக்கும் சவாலைக் கொடுத்தது நட்சத்திர விடுதி. யாராலும் இயலாததை ஸ்டீஃபன் மில்ஸ் என்பவர் செய்து அசத்தியுள்ளார்.

இவ்வாறு திறக்கப்பட்டுள்ள குறித்த பெட்டகத்தில் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை எனவும், சில ஆவணங்கள், பழைய காசோலைகள் போன்றவையே காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net