சிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 21 இராணுவ வீரர்கள் பலி!

சிரியாவில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.

இத்லிப் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் இவர்கள், அதன் அண்டை மாகாணங்களிலும் கால் பதிக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இத்லிப் மாகாணத்தின் அருகே உள்ள ஹமா மாகாணத்தின் ஜிபீன் நகரில் அரசு படையினருக்கும், ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் ரொக்கெட் குண்டு வீச்சுத்தாக்குதல்களை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து இராணுவ வீரர்களும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பதில் தாக்குதலை நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடும் போர் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 21 இராணுவ வீரர்களும், 14 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 4789 Mukadu · All rights reserved · designed by Speed IT net