முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமனம்.

முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமனம்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், கபீர் ஹசீம், ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களின் பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கீ ஜயவர்தன, நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் பிரதி அமைச்சர் புத்திக பத்திரண கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நாட்டிலுள்ள ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து கடந்த வாரம் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net