RNA தொழில்நுட்பத்தை வைத்து உருவான கொரோனா தடுப்பூசி.

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோடெக் நிறுவனமும் இணைந்து கண்டறிந்துள்ள மெசஞ்சர் RNA தொழில்நுட்பத்தை வைத்து உருவான கொரோனா தடுப்பூசி

மூன்றாம் கட்ட Phase III பரீட்சையை முறையாகக் கடந்து அதிகாரப்பூர்வமாக முடிவுகளை வெளியிட்டுள்ள உலகின் முதல் கொரோனாவுக்கான தடுப்பூசி

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோடெக் நிறுவனமும் இணைந்து கண்டறிந்துள்ள மெசஞ்சர் RNA தொழில்நுட்பத்தை வைத்து உருவான கொரோனா தடுப்பூசி

மூன்றாம் கட்ட Phase III பரீட்சையை முறையாகக் கடந்து அதிகாரப்பூர்வமாக முடிவுகளை வெளியிட்டுள்ள உலகின் முதல் கொரோனாவுக்கான தடுப்பூசி என்ற பெயரை இந்த வேக்சின் பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசியின் பெயர் BNT162b2. ஜூலை 27-ம் தேதி ஆரம்பித்த இந்த சோதனையில் நவம்பர் 13-ம் தேதி வரை 41,135 பேருக்கு முதல் டோஸ் அதற்குப்பிறகு மூன்று வார இடைவெளியில் மற்றொரு டோஸ் வழங்கப்பட்டுள்ளது .

வேக்சின் வழங்கப்பட்டவர்கள் ஒரு குழுவிலும் . இவர்கள் VACCINE GROUP என்று அழைக்கழ்படுவர்; வேக்சின் வழங்கப்படாதவர்கள் மற்றொரு குழுவிலும் இருப்பர். இவர்கள் PLACEBO GROUP என்று அழைக்கப்படுவர்.

இவர்களை கடந்த ஜூலையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வந்ததில் 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அந்த 170 பேர்களில் 162 பேர் வேக்சின் போடப்படாத PLACEBO GROUP ஐச் சேர்ந்தவர்கள்; 8 பேர் மட்டுமே வேக்சின் வழங்கப்பட்ட VACCINE GROUPஐச் சேர்ந்தவர்கள்.

இதன் மூலம் இந்த தடுப்பூசி 95% சிறப்பாக கொரோனா தொற்றைத் தடுத்துள்ளது என்பதை அறியமுடிகிறது. மேலும் கொரோனா தொற்று அடைந்தவர்களில் 10 பேர் தீவிர கொரோனா தொற்றுக்கு உள்ளாயினர். அவர்களுள் 9 பேர் வேக்சின் வழங்கப்படாத குழுவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே வேக்சின் வழங்கப்பட்ட குழுவைச் சேர்ந்தவர்.

65 வயதுக்கு மேற்பட்டவரிடம் தொற்று ஏற்படாமல் தடுத்ததில் 94% மார்க் வாங்கி பாஸாகி இருக்கிறது இந்த தடுப்பூசி. தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் ஓகே. பாதுகாப்பில் எப்படி என்ற கேள்விக்கான விடை இதோ ..

தடுப்பூசி வழங்கப்பட்ட 8000 பேரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தில்
அரிதி பெரும்பான்மை மக்களுக்கு தடுப்பூசி எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை என்றும் இரண்டாம் தடுப்பூசி வழங்கப்பட்ட சில நாட்களுக்கு 3.8% பேருக்கு உடல் சோர்வு (Fatique) 2% பேருக்கு தலைவலி இருந்துள்ளது. இளையோரை விட முதியோருக்கு இந்த பக்கவிளைவுகளும் குறைவான அளவிலேயே நிகழ்ந்துள்ளன.

இந்த தடுப்பூசி வழங்கப்பட்டவர்கள் இன்னும் இரண்டு வருடம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசியின் முக்கியமான பின்னடைவாக கருதப்படுவது, மைனஸ் எழுபது டிகிரி செல்சியஸ் குளிரில் இந்த வேக்சினை பாதுகாக்க வேண்டும்.

இருப்பினும் ஃபைசர் நிறுவனம் உறை பனி நிரப்பப்பட்ட கொள்கலன்களில் இந்த வேக்சினை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் அசகாய சூரப்பணியை ஏற்று செய்யும் திறன் அதனிடம் இருப்பதாகக் கூறுகிறது.

ஃபைசர் நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுக் கழகத்திடம் சமர்பித்து அவசர கால முன் அனுமதி பெற்ற பிறகு அந்த தடுப்பூசியை அதிகமாக உற்பத்தி செய்து விநியோகம் செய்ய முடியும்.

பெயரை இந்த வேக்சின் பெற்றுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net