செவ்வாயில் தரையிறங்குகிறது நாசா அனுப்பிய ஆய்வூர்தி பெர்சிவரன்ஸ் விண்கலம்.

‘நாசா’ வின் செவ்வாய் பயணம்
இன்று, Feb 18, 2021 செவ்வாயில் தரையிறங்குகிறது நாசா அனுப்பிய ஆய்வூர்தி பெர்சிவரன்ஸ் விண்கலம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், ‘ரோவர்’ என்ற ஆய்வு வாகனத்தை அனுப்பியுள்ளது, . கடந்தாண்டு, ஜூலை, 30ல், புளோரிடாவின் கேப் கேனவரல் விமானப்படை தளத்தில் இருந்து, இது அனுப்பி வைக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தில், ஒரு செவ்வாய் கிரக ஆண்டு, அதாவது பூமியைப் பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகள், அங்கு சுற்றி, பல்வேறு ஆய்வுகளை, ரோவர் வாகனம் மேற்கொள்ள உள்ளது.
கடந்த 7 மாதங்களுக்கு முன் ஏவப்பட்ட விண்கலம்
மணிக்கு 12 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில்
293 மில்லியன் மைல்கள் பயணித்து
இன்று செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியை அடைந்துள்ளது.

இந்த கோளத்தில் இருந்து பாராசூட் மூலம் ரோவர் பிரிக்கப்பட்டு பின்னர், அதிலிருந்தும் பெர்சிவரன்ஸ் பிரிந்து ஜெசீரோ கிரேட்டர் (Jezero Crater) எனும் பள்ளத்தில் ஆய்வு நடத்துகிறது.

இந்த விண்கலத்தில் இருந்து தனியாகப் பிரிந்து சென்ற ஆய்வூர்தியான பெர்சிவரன்சை சுமந்து செல்லும் கோளவடிவான வாகனம் செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழைகிறது. இந்த கோளத்தில் இருந்து பாராசூட் மூலம் ரோவர் பிரிக்கப்பட்டு பின்னர், அதிலிருந்தும் பெர்சிவரன்ஸ் பிரிந்து ஜெசீரோ கிரேட்டர் (Jezero Crater) எனும் பள்ளத்தில் ஆய்வு நடத்துகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற ஆய்வை ரோவர் வாகனம் மேற்கொள்ள உள்ளது.

விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, செவ்வாய் கோளில், விண்வெளி ஹெலிகாப்டரை நாசா பறக்கவிட உள்ளது.
ஹெலிகாப்டர் Ingenuity
காற்று இல்லாத மற்றும் அடர்த்தி அதிகம் கொண்ட செவ்வாய் கிரகத்தில் பறப்பதற்கு
1.8 கிலோகிராம் மட்டுமே எடை
4 கார்பன்-ஃபைபர் பிளேடுகள் மூலம் பறந்து செல்லும்
பூமியில் ஒரு ஹெலிகாப்டரின் இறக்கைகள் சுழல்வதைவிட 8 மடங்கு அதிகவேகத்தில் சுழலும்.
நிமிடத்திற்கு 2 ஆயிரத்து 400 முறை எதிரெதிர் திசைகளில் சுழலும்.

‘நாசா’வின் முயற்சியில், இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனின் பங்களிப்பு.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில், இந்தியாவில் பிறந்த, நாசா விஞ்ஞானி, டாக்டர் சுவேதா மோகனுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு வாகனத்தை அனுப்பும் இந்த திட்டம், 2013ல் துவங்கியதில் இருந்தே அதில் ஈடுபட்டு வந்தார் சுவாதி. ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார். விண்வெளி ஆய்வில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். நாசாவின், சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை, இவர் உருவாக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி, தன், 1 வயதில், அமெரிக்காவுக்கு சென்றார். பள்ளியில் படிக்கும்போது, குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என நினைத்துள்ளார். அதே நேரத்தில், ‘ஸ்டார் டிரெக்’ என்ற, ‘டிவி’ நிகழ்ச்சியைப் பார்த்து, புதிய உலகங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்று செயல்திறன் வெற்றி பூரணமாகியது.

Dr. Swati Mohan: The Cosmic Genius
She is the proverbial rocket scientist. Swati Mohan, the Mars 2020 Guidance, Navigation, and Controls Operations Lead at Jet Propulsion Laboratory in Cape Canaveral is relieved. The team completed the successful launch of the Mars 2020 Perseverance on July 30, 2020 at NASA, and also finished its first manoeuvre in outer space on August 14. Swati’s work in being a part of designing and developing the landing tech, the Terrain Relative Navigation System for Perseverance is now on course to define Mars exploration, with four more manoeuvres and many turns scheduled before its much-anticipated
February 18, 2021 landing on the Red Planet.
– Giri Naga

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net