ஐரோப்பியப் சுகாதாரப் பாஸ் இன்று முதல் நடைமுறைக்கு.

ஐரோப்பியப் சுகாதாரப் பாஸ்
இன்று முதல் நடைமுறைக்கு!
30 நாடுகளில் இலகுப் பயணம்

வைரஸ் சோதனைகள், தனிமைப் படுத்தல்கள் ஏதும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே பயணிப்பதற்கான சுகாதாரப் பாஸ் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

“Le Certificat Covid numérique UE” என்று பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படு
கின்ற EU digital Covid Certificate இன்று ஜூலை முதலாம் திகதி தொடக்கம்
பயணங்களில் ஏற்றுக் கொள்ளப்படும்.

இரண்டு தடவைகள் தடுப்பூசிகளைச் செலுத்தியவர்கள் இந்தப் பயணச் சான்றிதழை site de l’Assurance maladie என்கின்ற அரச சுகாதார காப்புறுதி நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் தரவிறக்கிப் பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுவாக சுகாதாரக் கடவுச் சீட்டு என்று
அழைக்கப்படுகின்ற இந்தச் சான்றிதழில்
காணப்படும் QR Code காகித வடிவத்தி
லும் TousAntiCovid application என்கின்ற
மொபைல் தொலைபேசி டிஜிட்டல் வடி
வத்திலும் பெற்றுப் பயன்படுத்தலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு
கள் அனைத்திலும், மற்றும் ஐஸ்லாந்து நோர்வே, சுவிற்ஸர்லாந்து, லிச்சென்ஸ் ரீயன் (Iceland, Norway, Switzerland, Liechtens tein) ஆகிய நாடுகள் உட்பட சுமார் முப்பது நாடுகளில் பயன்படுத்தலாம்.

சுகாதாரச் சான்றிதழை வைத்திருப்பவர்
தடுப்பூசி ஏற்றியவர், வைரஸ் தொற்று இல்லாதவர், நோய் எதிர்ப்பு தூண்டப்
பட்டவர் என்பது உறுதிப்படுத்தப்படுவ
தால் அவர் விமான நிலையங்களையும்
பயணவழிச் சோதனைகளையும் இலகு
வில் தாண்டிச் செல்ல முடியும்.

பிரான்ஸில் பெரும் எண்ணிக்கையில்
ரசுகர்கள் கூடுகின்ற இன்னிசை அரங்கு
கள் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றுவ
தற்கும் சுகாதாரப் பாஸைப் பயன்படுத்த
முடியும்.

இதேவேளை –

பிரான்ஸில் கொரோனா வைரஸ் சுகாதாரக்கட்டுப்பாடுகள் நேற்று ஜூன்
30 ஆம் திகதியுடன் கிட்டத்தட்ட முற்று முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டன .

நாட்டில் மூன்றாவது வைரஸ் அலை தோன்றியதை அடுத்துக் கடந்த ஆண்டு
ஒக்ரோபரில் அமுல் செய்யப்பட்ட பொது முடக்கக் கட்டுப்பாடுகள் மே மாதம் முதல் மூன்று கட்டங்களாகத் தளர்த்தப்பட்டிருந்
தன. அதன் தொடர்ச்சியான நான்காவது இறுதிக் கட்டம் நேற்று அமுலுக்கு வந்தது .

உணவகங்கள், அருந்தகங்கள் என்பன இருக்கைக் கட்டுப்பாடுகள், வாடிக் கையாளர் வரையறை என்று எந்த வித
சிரமங்களும் இன்றி முழு அளவில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
வர்த்தக நிலையங்கள், சினிமா அரங்குகள் போன்ற பொது இடங்களிலும் ஆட்கள் வரையறை இனிமேல் கட்டாயமாக இருக்காது.
திருமண நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடு
கள் நீங்குகின்றன. ஆயினும் பொதுவான சமூக இடைவெளி தொடர்ந்து பேணப்படவேண்டும்.

குமாரதாஸன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net