அத்தனை ஆதரவு தந்த வடிவேலு கிரிக்கெட் போட்டிக்கு வராதது ஏன்?

vadivelu001
நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. விஷால், வந்திருந்த அனைவருக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தார்.இந்நிலையில் இப்போட்டி குறித்து பேச்சு ஆரம்பித்த காலத்திலிருந்தே வடிவேலு, விஷாலுடன் இணைந்து பல பணிகளை செய்தார்.அணிகள் அறிமுக நிகழ்ச்சியில் கூட மேடையில் தோன்றி கலகலப்பாக்கினார். ஆனால், கடைசி நேரத்தில் வடிவேலு போட்டிக்கு வரவில்லை.என்ன என்று விசாரிக்கையில் வடிவேலுவும் ஒரு அணியில் விளையாடுவேன் என கூறினாராம், ஆனால், பலரும் ‘இல்லன்னே இது பயிற்சி எடுத்து விளையாடுகிறார்கள், உங்களுக்கு விளையாட தெரியாது’ என கூறிவிட்டார்களாம்.இதனால், கோபமான வடிவேலு கிரிக்கெட் போட்டியை புறக்கணித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net