ஜப்பான் நில அதிர்வில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்

msஜப்பானில் இடம்பெற்ற நில அதிர்வில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 14ம் திகதி மற்றும் 16ம் திகதி ஜப்பானில் இடம்பெற்ற நில அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இவ்வாறு இரங்கல் வெளியிட்டுள்ளார்.

ஜப்பானிய சக்கரவர்த்தி அஹிதோவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் மக்கள் இந்த அனர்த்தத்திலிருந்து கூடிய விரைவில் மீண்டு விடுவார்கள் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜப்பானிய மக்களின் நெருக்கடிகள் பிரச்சினைகளின் போது இலங்கை மக்கள் அவர்களுக்காக தோள் கொடுக்க எந்த நேரத்திலும் ஆயத்தத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இடம்பெற்ற நில அதிர்வில் 37 பேர் கொல்லப்பட்டதுடன், 2000 பேர் காயமடைந்திருந்தனர்.

நில அதிர்வு காரணமாக 73000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net