முடிவில்லாத பேச்சுக்கள் -கி.கலைமகள்

hqdefaultமுடிவில்லாத பேச்சுக்களுடன்
மேடையேறும் என் கால்கள்
கண்ணீரின் ஈரலிப்பில் கலந்து வருவதால்
இன்பம் தரலாம் – ஆனால:;
இது கதறலின் மொழிபெயர்ப்பு
இந்த மொழி பெயர்ப்பில் குருதியம் கலந்திருக்கும்
உங்கள் முன்
மேடையேறும் எங்கள் கால்கள்
வெந்து போகிறது – ஆனால்
எல்லாவற்றையும்
பேசிதீர்த்துக்வதற்காய்
மீண்டும் மீண்டும்
மேடையேறுகின்றது.

Copyright © 4622 Mukadu · All rights reserved · designed by Speed IT net