ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இரத்து : காரணம் வெளியானது.!

opa
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அமெ­ரிக்க விஜயம் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி ஊடக பிரிவு தெரி­வித்­துள்­ளது.

சூழல் பாது­காப்பு தொடர்பில் இடம்­பெ­ற­வுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்­வ­மான விஜயம் மேற்­கொண்டு 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி அமெ­ரிக்­கா­வுக்கு பய­­ண­மா­க­வி­ருந்தார்.

இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அமெ­ரிக்க விஜயம் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தியின் செல­வீ­னங்­களை குறைப்­ப­தற்­காக சர்­வ­தேச நாடு­க­ளுக்­கான விஜ­யங்­களை குறைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி ஏற்­க­னவே அறி­வித்­திருந்தமை குறிப்­பி­டத்­தக்­கது.

எவ்­வா­றா­யினும் அமெ­ரிக்க விஜ­யத்தின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவை சந்­திக்க இருந்­த­துடன் , அமெ­ரிக்கா வாழ் இலங்­கை­யர்­க­ளையும் சந்­தித்து இலங்­கையின் அபி­வி­ருத்­திக்கு ஒத்­து­ழைப்பு செய்ய அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்க இருந்­த­தாக ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு குறிப்­பிட்­டி­ருந்­தது.

இந்த விஜ­யத்தின் போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுக்கவிருந்ததாக எதிர்பார்க்கப்பட்டது.
வீரகேசரி

Copyright © 9499 Mukadu · All rights reserved · designed by Speed IT net