பாரிசிலும் யாழ்பாணத்திலும் சமவேளையில் இணைந்த தாயகம் – புலம்பெயர் கலைஞர்களின் முதலாவது கூட்டுச் சந்திப்பு !

parish-tgte-180416-seithy (1)தாயகம் – புலம்பெயர் கலைஞர்களிள் கூட்டுச் செயற்பாடுகளுக்கு, வழிமுறையினை உருவாக்கும் நோக்கிலான முதலாவது சந்திப்பு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதன் முதற்கட்டமாக, கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 16) தலைநகர் பரிசிலும், யாழ்பாணத்திலும் சமவேளையில் ஒன்றுகூடிய கலைஞர்கள், இணைய தொழில்நுட்ப காணொளி பரிவர்த்தனை வாயிலாக இச்சந்தித்துக் கொண்டனர். ஈழ சினிமாவை அடிப்படையாக கொண்டு, முழுநீள – குறும்பட உருவாக்கங்கள் சமீபத்திய காலங்களிலும் இரு தளங்களிலும் அதிகரித்து வருகின்ற நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

– தாயகத்தில் உருவாகும் திரைப்படங்களை புலம்பெயர் தேசங்களில் திரையிடுதல்

– புலம்பெயர் தேசங்களில் உருவாகும் படங்களை தாயகத்தில் திரையிடுதல்

– தாயக – புலம்பெயர் கலைஞர்களின் கூட்டுச் செயற்படுவதற்கான புள்ளிகளை இனங்காணுதல்

– நிதி வளம், சந்தை வாய்ப்புக்கள், மக்களிடத்தில் இது குறித்தான விழிப்பு

என பல்வேறு விடயங்களை நோக்காக கொண்டு இசந்திப்புக்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

அடுத்து திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு என பல்வேறு பகுதிகளிலும் புலம்பெயர் கலைஞர்களுடன் சந்தித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை, தாயக கலைஞர்கள் ஆர்வத்துடன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
parish-tgte-180416-seithy (7)

parish-tgte-180416-seithy (2)

parish-tgte-180416-seithy (4)

parish-tgte-180416-seithy (6)

parish-tgte-180416-seithy (3)

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net