கூட்டணி கட்சியின் சின்னம் தெரியாமல் குழம்பிய விஜயகாந்த்

vijayagath-dmdk002
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் தெரியாமல் குழம்பியது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் எதிர்வரும் மே-16ம் திகதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணிக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று ஒசூரில் நடந்த பொதுகூட்டத்தில் பேசிய விஜயகாந்த், அம்மாவட்ட தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இருவரையும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவரையும் அறிமுகம் செய்தார், பின்னா் தேமுதிக வேட்பாளர்கள் இருவரையும் ஆதரித்து முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து எந்த சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல திணறிய விஜயகாந்த் அரிவாளா? சுத்தியா? என அக்கட்சி வேட்பாளரிடம் கேட்டறிந்த பிறகு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்குமாறு தெரிவித்தாா்.

இதனால் கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.

Copyright © 5340 Mukadu · All rights reserved · designed by Speed IT net