400 அகதிகளுடன் மத்திய தரைக்கடலில் மூழ்கிய படகு ….6 பேர் பலி

padku
மத்திய தரைக்கடலில் 400 அகதிகளை ஏற்றி சென்ற படகொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எகிப்திய கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதெச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களில் பெறும்பாலானோர் சோமாலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேர் கடல் மார்க்கமாக ஐரோப்பாவில் குடியேற முயற்சித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதன் போது ஏற்பட்ட விபத்துக்களினால் 800 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net