தமிழ் தேசத்தின் போராட்டம் எங்கு நோக்கி !வேலன்

civ
இலங்கையில் இரண்டு ஆற்றல்வளம் கொண்ட தேசிய இனங்களின் தேசத்தின் வளர்ச்சி தேசிய இனமுரண்பாடுகளை வளர்ந்து வந்துள்ளது. தன்னிடையே உள்ள அகமுரண்பாடுகளை உடைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டுவந்துள்ளது. அகமுரண்பாட்டிற்கான மூலக்காரணம் அது தொடர்ந்தும் தன்னை பாதுகாக்க முடியாத காரணத்தினால் உடைகின்றது. அதாவது சாதியக் கட்டமைப்பை பாதுகாக்கக் கூடிய உற்பத்தி முறை சிதைவிற்கு உட்படுகின்றது. இவ்வாறு உற்பத்திக் கட்டமைப்பு உடைகின்ற போது பொதுப் போக்கை நோக்கி நகர்கின்றார்கள். இவ்வாறு முன்னேறி வளர்ந்த போராட்டம் என்பது முள்ளிவாய்க்காலில் ஆக்கிரமிப்பு உள்ளாகியிருக்கின்றது. குற்றுயிரும் குறை உயிருமாக இருக்கின்றதை முற்றாக நசுக்விட பல முனைகளில் இருந்தும் முனைப்புக் காட்டப்படுகின்றது.
இன்று தேசிய இனப்பிரச்சனைக்கு பல வியாக்கியானங்கள் கொடுக்கப்படுகின்றது. தலித்தியவாதிகள் “தேசிய உணர்வாக ஆதிக்க சாதித் தேசிய நலனே தனது தமிழ்த் தேசியம் என வடிவப்படுத்தி இயங்கி வந்தார். பின்வந்த ஒவ்வொரு தலைமையும், ஆரம்பத்தில் முற்போக்கு தேசியக் கோரிக்கைகளை முனவைத்தாலும் காலகதியில் தாமும் ஆதிக்க சாதி நலனை வென்றெடுக்கவே முயற்சிப்பதை வெளிப்படுத்தினர்.““ இவ்வாறான பரிதாபமான கருத்துக்களை முன்வைக்கின்ற போக்கு என்பது தமிழ் தேசத்தின் வளர்ச்சிப் போக்கை சிதைக்கும் போக்காகும். இது அடிப்படையில் தேசியஇனப்பிரச்சனைக்கான காரணத்தை வேறு எங்கோ தேடுகின்றார்கள். இவர்கள் அடிப்படையில் வேளாளர்களின் நலனே தமிழ் தேசியம் என்று வேறு சொல்லாடல்களில் நிறுவ முற்படுவது கருத்துருவாக்கிகளுக்கான
இவர்கள் 1. தலித்தியம் பேசுபவர்கள் 2. இரட்டைத் தேசியம் (தலித்தியத்தின் கள்ளக் குழந்தை) 3. ஒத்தோடிகள் 4 சிங்கள பெருந்தேசியத்தின் பாதுகாலவர்கள் 5. இடதுசந்தர்ப்பவாதிகள் (அகநிலைவாதிகள்)
காரணம் தமிழ் சமூக உருவாக்கத்தில் இனக்குழுமங்களின் எச்சங்கள் என்பது வெவ்வேறு வடிவத்தில் இருந்து கொண்டு வருவதும் அவைகளை வைத்துக் கொண்டு பிரச்சனைக்கான
காரணத்தை உற்பத்தி முறையில் இருந்து அணுகாது. மேற்கட்டுமானத்தில் இருந்து அணுகுவதன் தவறு தலித்தியர்கள், சிங்கள பெருந்தேசிய வெறியர்களால் முன்வைக்கப்படுகின்றது. முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூகச் சிந்தனை (இனக்குழும- நிலப்பிரபுத்துவ ) வாழ்வின் வெளிப்பாடுகள் தொடர்ச்சியாக முதலாளித்துவ சமூகத்திலும் தொடர்கின்றது. இங்கு அந்த சிந்தனை வடிவம் ( Subjective ) அகவுணர்சு சார்ந்த போலியுணர்வுக்குரியதாக இருக்கின்றது.
சமூகத்தின் சிந்தனை வடிவங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது என்ற புரிதல் என்பது அவசியமானதாகும். நாம் சமூகத்தின் முன் புத்திஜீவிகளாக பிரகடனப்படுத்துகின்ற போது அடிப்படையில் சமூகவிஞ்ஞானப் பார்வையில் சமூகத்தினை பார்க்க முயற்சிக்கின்றோமா என்ற கேள்வி அடிப்படையாக இருக்கின்றது.
உற்பத்தி உறவு – உற்பத்தி சக்திக்கு மேல் கட்டப்படும் பழைய உற்பத்தி முறை சிதைக்கப்பட்டும் ஆனால் அதன் பழைய சிந்தனை வடிவம் தொடர்ந்து கொண்டிருக்கும். (இதற்கு அவசியமானது புதிய கலாச்சாரப் புரட்சிதான் என்று தீர்வாக முன்வைக்கப்படுகின்றது. இதனை மறைத்துக் கொண்டு புதிய வியாக்கியானம் கொடுக்கப்படுகின்றது). இதனை அக முரண்பாடு எனலாம் இது எம்மிடம் உள்ள மனக்கசப்பு கருத்துமுதல்வாதம் – மனிதர்களில் இருக்கும் போலியுணர்வு ( சிந்தனை, மனக்கசப்பு, உலகம் பற்றி புரிதல் இது இனக்குழும வாழ்வியல், நிலமானிய வாழ்வியல் சிந்தனைகளின் தொடர்ச்சியாக இருப்பது- சாதியுணர்வு, மத உணர்வு, பிரதேச உணர்வு என விரிந்து செல்கின்றது. இவ்வாறு பல விடயங்களை உள்ளகியிருப்பதுமாகும். இதன் இன்னொரு வெளிப்பாடு பிரதேசவாதமாகும் இது centric- மையவாதம்- இது யாழ்மையவாதம் என்பது நிலமானிய சிந்தனை அடித்தளமாக இருக்கின்றது. அமெரிக்க அடிமைகளின் விடுதலை என்பது சும்மா சாத்தியமாக்கவில்லை. வடக்கு அமெரிக்கா முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கியதாகவும் தென் அமெரிக்கா நிலவுடமைச் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த வேளையில் அடிமைகளை விடுதலை செய்வதன் ஊடாக வட- தென் முரண்பாடு என்பது தீர்வுக்கு வந்து ஐக்கிய அமெரிக்க இராச்சியமாக பரிணமித்தது. இங்கு இரண்டு பிரதேசங்களின் நலன் என்பதாக சுருக்கிப் பாத்துவிட முடியுமா? அவ்வாறு centric- மையவாதம்- என்று எடுத்திருந்தால் அடிமைகளை விடுதலை செய்ய ஆபிரகாம் லிங்கனால் முடிந்திருக்காது. காரணம் வடக்கு அமெரிக்க நலன் என்பது சுதந்திரமான உழைப்பாளிகளை வேண்டியிருந்தது. இங்கு வர்க்க வளர்ச்சியில் தேசிய இயக்கங்கள் உருவாகின்றது. இது குறிப்பிட்ட காலத்தில் தரகு வர்க்கம் தலைமை தாங்கியதுதான். ஆனால் இது பின்னர் இளைஞர்களால் (குட்டிமுதலாளிய) கைக்கு மாறியது என்பது வரலாற்றுத் திருப்பம்.

இங்கு சிந்தனை வடிவம் என்பது தனிமனிதர்கள் தீர்மானித்துக் கொள்வதில்லை. அது வாழ்நிலையே அதனை தீர்மானிக்கின்றது. அதேபோல அகமுரண்பாடுகள் சமூகத்தினை தீர்மானிப்பதில்லை. மாறாக புறநிலை (objecitve) என்பது பொருளாதார உறவுடன் கூடித்தீர்மானிக்கின்றது. இது இன்றையப் பொழுதில் மக்கள் பெரும்திரளின் கூட்டு வடிவத்தில் இருந்து உருவாகின்றது. இது இனக்குழுமத்தில் இருந்தும் அது கடந்து நிலமானிய சிந்தனையில் இருந்தும் மாறுபட்டு முதலாளித்துவ சிந்தனையில் நுழைகின்றது.
இங்கு இனக்குழும- நிலமானிய சிந்தனை முறைகளின் எச்சங்கள் என்பது சமூகத்தின் தீங்கான பொதுவுண்மையாக அரசியலுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
இனக்குழும- நிலமானிய முறைக்கு உட்பட்ட (taboo -socially stigmatized) மனிதர்களை பிரிக்கின்றது, அடக்குகின்றது, வளர்ச்சியை தடுக்கின்றது. இவற்றை உடைத்துக் கொண்டு முதலாளித்துவ கட்டத்திற்கு தேசிய இயக்கங்கள் வளருகின்ற காலமாகும்.
உயர் வர்க்கத்தின் வெளிப்பாடாக இப்போதும் தமிழ்த் தேசியம் பேசுவோர் இந்த உண்மையைக் காண மறுப்பது என்று தமிழ் தேசத்தின் போராட்டத்தினை குறுக்கிவிடுகின்றார்கள். இதுதான் தமிழ் தேசத்தின் போராட்டத்தை வேளாளியத்தினுள் இணைத்து திரித்துவிடும் போக்காகும்.
அகநிலையில் அமைந்த போக்கு எவ்வாறு சவாலுக்கு உட்பட்டதோ அதே போல தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முன்னைநாள் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களின் போக்குமாகும். மக்கள் தமது தேவைகளுக்காக அன்றாடம் போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்களின் தேவையை அறிந்து போராட்டத்தினை முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையில் தான் இருக்கின்றது. ஆனால் இவைகளை மறுதலித்துக் கொண்டு ஏனோதானோ என்று ஆண்டைகள் எவ்வாறு அடிமைகளை நடத்துவார்களே அவ்வாறே கீழ்தரமாக நடத்துகின்றார்கள்.
புலம்பெயர் அமைப்புகள் தமது தோல்வி மனப்பான்மையை திசைதிருப்புவதற்காய் லொபி, இணக்க அரசியலை மேற்கொள்கின்றார்கள். இவைகளே இன்றுள்ள பெரும் சவால்களாகும்.
1. இராணுவத்தை வெளியேற கோர மறுப்பவர்கள் யார்? தென்கில் ஏன் போராட முடியவில்லை
2. நிலங்களை திரும்பி ஒப்படைக்க வேண்டாத காரணம் என்ன? தெற்கில் போராட முடியவில்லை?
3. சம்பூர் அனல்மின்னிலை நிலைய நிர்மானத்திற்கு மௌம் காப்பதன் நோக்கமென்ன?
4.சரணடைந்தவர்களை பற்றி விபரம் அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்று தெற்கே போராட முடியாத காரணம் என்ன? இனவழிப்பிற்கு எதிராக ஏன் தெற்கில் குரல் கொடுக்க முடியவில்லை
5. சுயநிர்ணய உரிமையை ஆதரித்து தெற்கில் ஏன் போராடவில்லை?? இவற்றை விட்டு வெறும் அடையாளப் போராட்டங்கள் அனைத்தும் மக்கள் விரோதமானவையே.
ஒடுக்கப்படும் மக்களின் உரிமையை அங்கீகரிக்கக் கோருவதும் அவ்வாறு அங்கீகரிக்காவிடின் தமது இறைமையை, முடிவை தீர்மானிக்கும் வகையில் சர்வசன வாக்கெடுப்பைக் கோரும் போராட்டத்தினை நோக்கி நகர வேண்டியுள்ளது. இதுதான் எம்முன்னால் உள்ள வேலைமுறையாக உள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net