Facebook தமிழா-2016 ஒன்றுகூடல் நிகழ்வு

thmilaa
Facebook தமிழா-2016 ஒன்றுகூடல் நிகழ்வு
ஊடக அறிக்கை
திகதி: 24/04/2016
இடம்: AVS மண்டபம், #8, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி
நேரம்- முப 10.00 – பிப 2.00 வரை
இலங்கை சமூக ஊடக துறை வரலாற்றில் பேஸ்புக் பயனர்கள் முதன்முறையாக ஒழுங்கமைக்கும் ஒன்றுகூடல் நிகழ்வு ‪#‎பேஸ்புக்தமிழா_2016‬ என்ற பெயரில் எதிர்வரும் ஏப்பிரல் 24ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. இந்த ஒன்று கூடலின் நோக்கம் நாடு முழுவதும் உள்ள முகம் காணாத முகப்புத்தக நண்பர்களை ஓரிடத்தில் ஒன்று கூட்டி அவர்களுக்கிடையில் நேரடி அறிமுகங்களை உருவாக்குவதாகும்.அதுமட்டுமல்லாது,பேஸ்புக் நண்பர்களினால் திறம்பட ஒழுங்கமைக்கப்படும் இந்த ஒன்றுகூடலில், நகைச்சுவை பட்டிமன்றம்,மெல்லிசை பாடல்கள்,தனி நபர் திறமை வெளிக்காட்டல்கள் மற்றும் விறுவிறுப்பான பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன.மேலும் எதிர்காலத்தில் பேஸ்புக் பயனர்களாகிய நாம் பேஸ்புக்கில் மட்டும் கருத்துக்களை பகிராது எம்மால் இயன்ற சிறு சிறு சமூக நடவடிக்கைகளையும் முன்னெடுக்க எண்ணியுள்ளதுடன்,இத்தகைய நண்பர்களுக்கிடையிலான ஒன்றுகூடல்களை ஒரு சீரிய இடைவெளியில் நிகழ்த்தவும் ஆர்வமாய் இருக்கின்றோம்.நிகழ்வின் முடிவில் மதிய உணவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த நிகழ்வுக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 200-300 தமிழ் பேஸ்புக் பயனர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கின்ற அதேவேளை சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.இந்த நிகழ்வுக்கு தமிழ் பேஸ்புக் பயனர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி.
ஏற்பாட்டாளர்கள்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net