வரலாற்றில் முதல் முறை: ஜப்பான் ஹிரோஷிமா செல்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா

obamaஅணு குண்டு வீச்சில் நாசமான ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லவுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் ஹிரோஷிமா செல்வது இதுவே முதல் முறையாகும்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந் தனர். அடுத்த 3 நாட்களுக்கு பின் நாகசாகி மீது மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டதில் 74 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதன் பிறகே அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பின்னர் மன்னிப்பு கேட்டாலும், இதுவரை அணுகுண்டால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கண்டறிய அந்நாட்டின் அதிபர் யாரும் நேரில் சென்றது இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் மே 27-ம் தேதி ஜி-7 உச்சி மாநாட்டுக்காக ஜப்பான் செல்லவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிரோஷிமா நகரத்துக்கும் செல்லவுள்ளார். பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவர் அந்நகரத்துக்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால், அவரது இந்த சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத் துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்த தற்காக 2009-ம் ஆண்டு ஒபாமா வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. இந்த சுற்றுப்பயணத்தின் போது அணு ஆயுதத்துக்கு எதிராக அவர் உரையாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.

Copyright © 1469 Mukadu · All rights reserved · designed by Speed IT net