கூகுள் தலைவரான தமிழர் சுந்தர் பிச்சையின் கடந்தாண்டு சம்பளம் என்ன தெரியுமா?

googleகூகுள் தலைவரான தமிழர் சுந்தர் பிச்சையின் கடந்தாண்டு சம்பளம் என்ன தெரியுமா? 666 கோடி ரூபாய் (100 மில்லியன் டாலர்).
கடந்தாண்டு சுந்தர் பிச்சையின் மொத்த சம்பளம் 6 லட்சத்து 52 ஆயிரத்து 500 டாலர். அதாவது, பங்குச்சந்தையின் மதிப்பு படி 100 மில்லியன் டாலருக்கு சமம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைவரானார் பிச்சை; அப்போது அவருக்கு 199 மில்லியன் டாலர் பங்குகள் அளிக்கப்பட்டன.
பங்குகள் அடிப்படையில் அமெரிக்காவில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு, வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
பிச்சை, கடந்த 2004 ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சேர்ந்தார். அப்போது குரோம், ஆன்ட்ராய்டு பிரிவில் அவர் சாதனைகளை செய்தார்.
கூகுளின் குரோம் வெப் பிரவுசர் விஷயத்தில் அவர் சாதனைகள் பெரிதாக பேசப்பட்டன.

Copyright © 7273 Mukadu · All rights reserved · designed by Speed IT net