சிரியாவின் அதிபர் அஸாதை பதவியிலிருந்து அகற்றும் நோக்கில், மேற்குலக நாடுகள் தரைப்படைகளை அனுப்புவது தவறானாதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
பிபிசிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு பேட்டி
பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிரியாவில் செயல்படும், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பயங்கரவாத இயக்கத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ள அவர், சுயாதீனமாக அங்கு இராணுவத் தலையீட்டைச் செய்வது உள்நாட்டு பிரச்சனைகளைத் தீர்க்க உதவாது எனவும் தெரிவித்துள்ளார்.
அங்கு உள்நாட்டு மோதல்களுக்கு பொறுப்பான, அதிபர் அஸத் மற்றும் அவருக்கு அதரவான ரஷ்ய மற்றும் இரான் உட்பட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அதன் மூலம் தீர்வு குறித்து ஆராய வேண்டும் என்கிறார் ஒபாமா.
எனினும் அதை சாதிப்பது கடினமானதாக இருக்கும் எனவும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.