பாரீஸ் குண்டுவெடிப்பு – வெளியானது வீடியோ

பாரீஸ் குண்டுவெடிப்பில் வெடிப்பு தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்றை பிரான்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.
download (1)
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். இந்த குண்டுவெடிப்பில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளி சலா அப்தே சிலாம். வயது 26 வயதுடைய சிலாம், பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது, காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை அவரிடம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாரீஸ் தாக்குதலில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் வெடித்து சிதறும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை பிரான்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. பாரீஸில் உள்ள உணவகம் ஒன்றிற்கு உள்ளூர் நேரப்படி இரவு 9.40 மணியளவில் சென்ற தீவிரவாதி, அங்கு அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், ஒருவித படபடப்புடன் தனது முகத்தினை மறைத்துக்கொண்டு, காலியாக உள்ள மேஜையினை நோக்கி விரைகிறார்.

இவர், அங்கு சென்ற மறுநொடியில், மின்னல் வேகத்தில் வெடித்து சிதறுகையில், இவரது உடல் இரண்டு பாகங்களாக பிரிவதை காண முடிகிறது. சாப்பிட வந்த மற்ற நபர்கள், சிறுவித காயங்களுடன் அலறியவாறு அங்கிருந்து தப்பித்து ஓடுகின்றனர். தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், இது குழந்தைகளுக்கு பொருத்தமான வீடியோ கிடையாது என்ற எச்சரிக்கையுடன் ஒரு நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இச்சம்பத்தில் ஈடுபட்ட தீவிரவாதியின் பெயர் இப்ராகிம் அப்தேசிலாம். இவர் பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான சலா அப்தே சிலாமின் சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 7026 Mukadu · All rights reserved · designed by Speed IT net