நோர்வேயில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை

norway accident_CIநோர்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில், அதில் சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளனர். இருவரைக் காணவில்லை.

இன்றைய தினம் நோர்வேயின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து பெர்ஜன் நகருக்கு 11 ஊழியர்கள் உள்பட 13 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் டியூராய் தீவுக்கு அருகே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொருங்கியுள்ளது.

விழுந்தபோது ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதில் இருந்து கரும்புகை எழுந்ததாகவும் அங்கிருந்து தகவல் வெளியானது. தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net