விம்பிள்டன் பணப்பரிசு அதிகரிப்பு.

விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டி­களில் சம்­பியன் பட்டம் வெல்­ப­வர்­க­ளுக்­கான பணப்­ப­ரிசு இவ் வருடம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

16293wimbledon

வரு­டாந்தம் நடத்­தப்­படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்­டி­களில் தூய்­மையின் அடை­யா­ள­மாக விளங்­கு­வது விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டி­க­ளாகும்.

இப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் அனை­வரும் வெள்ளை அங்­கி­க­ளையே அணி­ய­ வேண்டும் என்­பது விம்­பிள்டன் ஏற்­பாட்டுக் குழுவின் நிய­தி­யாகும்.

இதன் மூலம் தூய்­மையின் முக்­கி­யத்­துவம் எடுத்­துக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

இப்போட்­டி­களில் பங்­கு­பற்­று­ப­வர்கள் சீமான்­க­ளா­கவும் சீமாட்­டி­க­ளா­கவும் அழைக்­கப்­ப­டு­கின்­றனர்.

சீமான்கள் மற்றும் சீமாட்­டிகள் ஒற்­றையர் பிரிவில் சம்­பி­ய­னாகும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் இவ் வருடம் 2.9 மில்­லியன் ஸ்டேலிங் பவுண்ட்கள் பணப்­ப­ரிசு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

மேலும் இவ் வருட மொத்தப் பணப் ­ப­ரிசு 5 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் பிர­காரம் இம்­முறை மொத்தப் பணப்­ப­ரிசு 28.1 மில்­லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்­க­ளாகும்.

விம்­பிள்டன் ஒற்­றையர் போட்­டி­களில் கடந்த வருடம் சம்­பி­யன்­க­ளான நொவாக் ஜொக்­கோ­விச்­சுக்கும் செரீனா வில்­லியம்­ஸுக்கும் தலா 1.88 மில்­லி­யன் ஸ்டேலிங் பவுண்ட்கள் பணப்­ப­ரிசு கிடைத்­தி­ருந்­தது.

தடை­செய்­யப்­பட்ட மெல்­டோ­னியம் என்ற ஊக்­க­ம­ருந்தை உட்­கொண்­டு­வந்­த­தாக மரியா ஷரப்­போவா ஒப்­புக்­கொண்­டதை அடுத்து இவ் வருட விம்­பிள்டன் போட்­டி­க­ளின்­போது ஊக்க மருந்து பாவ­னையைத் தடுக்கும் வகை­யி­லான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் 130ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ளது.

Copyright © 6249 Mukadu · All rights reserved · designed by Speed IT net