இராக்கில் நடைபெற்ற இரட்டைக் கார்குண்டுத் தாக்குல்களில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இராக்கில் தொடரும் குண்டுத் தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்படுகின்றனர்
இத்தாக்குதல்கள் நாட்டின் தென் பகுதியிலுள்ள சமாவா நகரில் இடம்பெற்றுள்ளது. இதில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரு குண்டுத் தாக்குஹல் மாகாண அரசின் கட்டடம் ஒன்றையும், மற்றொன்று பேருந்து நிலையம் ஒன்றையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் இத்தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை.
இதனிடையே இராக்கிய நாடாளுமன்றத்தில் அதிரடியாகப் புகுந்து கலாட்டா செய்து, பாதுகாப்புப் படையினரை தாக்கியவர்களை சட்டத்தின் முன்னர் நிறுத்துமாறு பிரதமர் ஹைதர் அல் அபாடி உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் பாகதாதின் உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் இன்னும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தீவிரவாத சிந்தனைகளைக் கொண்ட மதகுரு மொக்ததா அல் சதரின் ஆதரவாளர்கள்.
நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க உறுதியான அரசியல் சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றம் தவறிவிட்டது என்பதால் அந்தப் போராட்டாக்காரர்கள் ஆத்திரமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
பிபிசி