ஐரோப்பா செல்ல முயன்ற குடியேறிகள் 84 பேர் லிபியக் கடலில் மூழ்கினர்.

150828110244_libya_migrants_512x288_bbc_nocreditலிபியாவை அண்டிய கடலில், படகு ஒன்று மூழ்கியதில் குடியேறிகள் 84 பேர் காணாமல்போயுள்ளதாக ஐஓஎம் என்ற குடியேறிகள் தொடர்பான சர்வதேச அமைப்பு கூறுகின்றது.

லிபியாவின் சப்ராட்டா என்ற இடத்திலிருந்து 4-மைல் தூரத்தில் அவர்களின் காற்றடைக்கப்பட்ட டிங்கி படகு மூழ்கிய நிலையில், 26 பேரை மீட்கப்பட்டுள்ளதாக ரோம் நகரில் உள்ள கடலோரக் காவல்படையை மேற்கோள்காட்டி இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டில், இதுவரை சுமார் 27 ஆயிரம் குடியேறிகள் படகுமூலம் இத்தாலியை வந்தடைந்துள்ளனர்.

பால்கன் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், படகு மூலம் கடப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
பிபிசி

Copyright © 3247 Mukadu · All rights reserved · designed by Speed IT net