சிறீலங்காவின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் நினைவுதினம் அனுட்டிப்பு.

premadas
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் 23ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் அனுட்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிபர் மைத்திரிபாலசிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பிரேமதாசவின் குடும்பத்து முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது புதுக்கடை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரரேமதாசவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறீலங்காவின் 3ஆவது அதிபராகிய ரணசிங்க பிரேமதாச 1950-1989ஆண்டு வரையான 39ஆண்டுகள் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் பல அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளார்.

இவர் 1993ஆம் ஆண்டு கொழும்பு ஆமர் வீதியில் நடைபெற்ற மேதினப் பேரணியில் கலந்துகொண்டிருந்த சமயம் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் தனது 69ஆவது வயதில் காலமானார்.

Copyright © 8428 Mukadu · All rights reserved · designed by Speed IT net