மஹிந்தவின் மே தின கூட்டத்தில் கலக தடுப்பு பொலிஸார் குவிப்பு.

மகிந்த கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட மே தின கூட்டத்திற்கு கலகத் தடுப்பு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர் தாரை பிரயோகிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த மே தின கூட்டத்தை நடத்துவதற்கு கூட்டு எதிரணியினர் நாரஹேன்பிட்டி – சாலிகா மைதானத்திற்கு அனுமதி கோரியிருந்த நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் பிரகாரம், குறித்த கூட்டம் தற்போது கிருலப்பனையில் நடைபெற்று வருகின்றது.

அத்துடன், நாரஹேன்பிட்டி மற்றும் சாலிகா மைதான வளாகப் பகுதிகளில் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
maki

makii

Copyright © 4974 Mukadu · All rights reserved · designed by Speed IT net