பார்முலா 1 கார் பந்தயம் ராஸ்பெர்க் சாம்பியன்

Daily_News_2216106653214ரஷ்யன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். சோச்சி நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஸ்பெர்க் 1 மணி, 32 நிமிடம், 41.997 விநாடிகளில் முதலாவதாக வந்து கோப்பையை கைப்பற்றினார். 10வது இடத்தில் இருந்து தொடங்கினாலும் அபாரமாக செயல்பட்ட சக மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் (+25.022 விநாடி) 2வது இடம் பிடித்தார். செபாஸ்டியன் வெட்டல் (பெராரி) ஓட்டிய கார் மீது டானில் க்வியாட் ஓட்டிய கார் பின்புறம் இருந்து இடித்ததால், வெட்டல் பந்தயத்தில் இருந்து துரதிர்ஷ்டவசமாக விலக நேரிட்டது.

போர்ஸ் இந்தியா வீரர் நிகோ ஹல்கன்பெர்க், வில்லியம்ஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் ஓட்டிய கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை நடந்துள்ள 4 பந்தயங்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற ராஸ்பெர்க் 100 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ஹாமில்டன் (57 புள்ளி), கிமி ரெய்கோனன் (பெராரி, 43 புள்ளி) அடுத்த இடங்களில் உள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net