அமெரிக்க மலையேறிகள் இரண்டு பேரின் உடல்கள் 16 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இமயமலையில் பனிச்சரிவு ஒன்றில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறிகள் இரண்டு பேரின் உடல்கள் 16 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
160502073345_cn_alex_lowe_david_bridges_512x288_alexlowefoundation_nocredit
அலெக்ஸ் லோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் டேவிட் பிரிட்ஜெட்ஸ்
புகழ்பெற்ற மலையேறிகளான அலெக்ஸ் லோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் டேவிட் பிரிட்ஜெட்ஸ் ஆகியோர் திபெத்தில் உள்ள ஷிஷாபங்மா மலையுச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது பலியாகியிருந்தனர்.

அதே மலை உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்த மற்ற இருவர் இவர்களின் உடல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

உருகும் பனிப்பாறை ஒன்றிலிருந்து அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் முதுகில் மாட்டியிருந்த பைகள் ஆகியவற்றை கொண்டு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவர்களது உடல்களை கண்டுபிடித்த செய்தி தமக்கு ஆறுதல் அளிப்பதுடன் அவர்கள் காணாமல் போனது தொடர்பில் இப்போது ஒரு முடிவு தெரிந்துள்ளது என அலெக்ஸ் லோவ்வின் குடும்பத்தினர் கூறினார்கள்.
பிபிசி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net