ரஷ்யாவிடம் உதவி கோருகிறது அமெரிக்கா.

masala1_2838224f
சிரியாவின் அலெப்போ நகரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந் திருப்பதால் ரஷ்யாவிடம் அமெரிக்கா உதவி கோரியுள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டின் பெரும்பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மிதவாத எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் சில பகுதிகள் உள்ளன.

இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சியால் அதிபர் ஆசாத்துக்கும் மிதவாத எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அண்மையில் சண்டைநிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்படி தலைநகர் டமாஸ்கஸ், லத்திகா உள்ளிட்ட பகுதிகளில் போர் ஓய்ந்துள்ளது.

எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல்-காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக ஆசாத் படைகள் தொடர்ந்து போரிட்டு வருகின்றன. அலெப்போ நகரில் அல்-காய்தா தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாகக் கூறப்படு கிறது. இதனால் அந்த நகரை ஆசாத் படைகள் கடந்த ஒரு வாரமாக சுற்றிவளைத்து தாக்கி வருகிறது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அலெப்போ நகரின் பெரும் பகுதி மிதவாத எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா ராணுவ உதவி செய்து வருகிறது.

இந்தப் பின்னணியில் அலெப்போ நகர் மீதான தாக்குதலை நிறுத்த உதவுமாறு ரஷ்யாவிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஹிந்து

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net