வீராட் கொஹ்லி க்கு கோல் ரத்னா விருது

விராத் கோலிக்கு கேல் ரத்னா விருது, ரஹாணேவுக்கு அர்ஜுனா விருது : பிசிசிஐ பரிந்துரை

இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) இன்று (செவ்வாய்க் கிழமை) ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு விராத் கோலியையும், அர்ஜுனா விருதிற்கு அஜின்க்கியா ராஹானேவையும் பரிந்துரை செய்துள்ளது.
பெருமை மிக்க விருதாக கருதப்படும் அர்ஜுனா விருது 1961-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு  ரூ.5 லட்சம் பரிசாக அளிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 1991-92 ஆண்டுகளில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ரூ.7.5 லட்சம் பரிசாக அளிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் வீரரை, கேல் ரத்னா விருதிற்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேல் ரத்னா விருதினை விராத் கோலிக்கு அளிக்கப்பட்டால் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனிக்குப்பின்  இவ்விருதினை பெறும் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார்.
மேலும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில், விராத் கோலி அதிக ரன்களை எடுத்ததன் அடிப்படையிலும், ரஹாணே கடந்த வருடம் ஸ்ரீலங்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்து சாதனையை சமன் செய்ததன் அடிப்படையிலும் இவர்கள் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை
செய்ததாக கூறப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net