இளைய தளபதி விஜய்யும், சீயான் விக்ரமும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நண்பர்கள் என்றாலும் சினிமாவில் போட்டி என்று வந்து விட்டால் மோதித்தானே ஆகவேண்டும்.அந்த வகையில் விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. அதேபோல் விக்ரம் அடுத்து கருடா என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படமும் பொங்கலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் தமிழன்- ஜெமினி, சிவகாசி- மஜா படங்களை தொடர்ந்து விஜய் 60- கருடா மோதும் வாய்ப்பு அமைந்துள்ளது.