ஒரு நாளைக்கு 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடும் இளைஞர்கள்

201605070152279766_Youngsters-are-spending-over-three-hours-a-day-on-their_SECVPF

1980-களுக்கு பிறகு பிறந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் ஒரு நாளைக்கு 3 மணிநேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்டுகளில் செலவிடுவதாக சர்வதேச புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.

குளோபல் வெப் இண்டக்ஸ் எனும் இந்த புள்ளிவிபரம் தெரிவித்துள்ளபடி, 18 முதல் 32 வயதுள்ள ஒவ்வொரு இளைஞரும் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் 14 நிமிடங்கள் சராசரியாக ஸ்மார்ட்போன்களில் மட்டும் செலவிடுவதாக தெரியவந்துள்ளது. 2012-ம் ஆண்டைவிட தற்போது இது அதிகரித்திருப்பதாகவும், தொடர்ந்து இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை செலவிடுவது உயரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில், ஜெர்மனியில் ஸ்மார்ட்போன்களில் மூழ்கியிருப்பவர்களுக்காகவே சாலைகளில் தரையில் டிராபிக் சிக்னல் விளக்குகளை பொருத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net